--- --:--:-- --

நீட் முறைகேடு – 14 பேரின் கல்லூரி சேர்க்கை ரத்து

2

டந்த ஆண்டு நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 14 பேரின் கல்லூரி சேர்க்கையை ரத்து செய்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 14 பேரின் கல்லூரி சேர்க்கையை ரத்து செய்து தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

 

சிபிஐ மற்றும் தேசிய தேர்வு முகமை இணைந்து நடத்திய விசாரணையில், 2024-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் போது முறைகேடு, ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு ஆகிய முறைகேடுகள் நடந்ததாக தெரியவந்தது. இதையடுத்து இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்து தேசிய மருத்துவ ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது.

 

மேலும் விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த 26 எம்பிபிஎஸ் மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முறைகேடுகளில் ஈடுபட்ட 42 பேர் மறுதேர்வு எழுத 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு நீட் தேர்வு எழுதிய 215 தேர்வர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் தேசிய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon