--- --:--:-- --

சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தீவிரவாதி?

1

சென்னையில் இருந்து சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கொழும்புவில் தரையிரங்கிய அந்த விமானத்தை இலங்கை பாதுகாப்பு படையினர் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.

 

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பிடிக்க இந்திய ராணுவத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகப்படுபவர்கள் அனைவரும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

 

இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரையும் விடமாட்டோம் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி சென்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் வந்ததால் பண்டாரநாயக்கே விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அடுத்து விமானம் முழுவதும் சல்லடை போட்டு இலங்கை பாதுகாப்பு படையினர் தேடினர். இந்த விமானம் சென்னையில் இருந்து கொழும்பு சென்றுள்ளது.

 

இதனிடையே இலங்கை ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வழியாக கொழும்புக்கு வந்த UL 122 என்ற விமானம் (விமான எண்: 4R ALS) நாட்டிற்குள் வந்ததும், சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் விமானத்தில் இருப்பதாக சென்னை விமானக் கட்டுப்பாட்டு மையம் வழங்கிய எச்சரிக்கையைத் தொடர்ந்து, உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பு சோதனையின் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

விமானம் முழுமையாக சோதிக்கப்பட்டு அதை தொடர்ந்து வழக்கமான இயக்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த கட்டாயமான பாதுகாப்பு நடைமுறையின் காரணமாக, அடுத்ததாக திட்டமிடப்பட்ட சிங்கப்பூர் செல்லும் UL 308 விமான சேவை தாமதமாகியுள்ளது. எங்கள் பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பும் நலனும் எப்போதும் எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமையாகும்.

 

பாதுகாப்பு தொடர்பான உயர் தரநிலைகளை நிலைத்துவைத்துக் கொள்வதற்காக எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon