பாஜக கூட்டணியில் சேர கட்சிகளுக்கு நயினார் அழைப்பு..!
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், பாஜகவை தவெக தலைவர் விஜய் விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், விஜய்க்கு பாஜகவை பார்த்து பயமா என கேள்வி எழுப்பினார். அத்துடன் 2026 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப விரும்பும் கட்சிகள் பாஜக கூட்டணியில் சேரலாம் எனவும் அழைப்பு விடுத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




