கழுத்தை நெரித்த கடன்: விபரீத முடிவெடுத்த பெண்!
குஜராத்தில் கடன்சுமை தாங்காமல், பெண் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜாம் நகர் மாவட்டத்தில் பானு பென் ஜீவாபாய் என்பவர் தனது 4 குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக உறவினர்களிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல. அந்த எண்ணம் எழுந்தால் 104 என்ற எண்ணை அழைக்கவும்.






