தவெகவினருக்கு விஜய் முக்கிய உத்தரவு..!
தவெக பொதுக்குழுக் கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தக் கூட்டத்துக்கு முன்பாக, மாவட்ட வாரியாக மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை உடனடியாக பட்டியலிட்டு சமர்ப்பிக்க தவெக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 2021 தேர்தலில் திமுக சார்பில் கொடுக்கப்பட்டு, இதுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கும் வாக்குறுதிகளின் பட்டியலையும் வழங்குமாறு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.





