தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படை
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் 1 மணி நேரத்திற்கு பிறகு எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் வழக்குப் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் படகுடன் மீனவர்கள் நிம்மதியுடன் கரை திரும்பியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




