--- --:--:-- --

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் இன்று வாக்கெடுப்பு..!

1

பாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது. சபாநாயகர் அப்பாவு ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதால் அவரை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் வழங்கினார்.

 

பேரவையில் அதிமுகவினர் அதிக நேரம் பேச அனுமதிப்பது இல்லை என்றும் அதிமுகவினர் பேசுவதை ஒளிபரப்புவது இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். அந்த தீர்மானம் 17 ஆம் தேதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அலுவல் ஆய்வு குழு கூட்டத்தின் முடிவில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அதன்படி, பேரவை தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது. தீர்மானத்தின் மீது ஆர்.பி. உதயகுமார் பேச உள்ளார்.

 

இதற்கு முதலமைச்சர் அல்லது அவை முன்னவர் பதிலளித்து உரையாற்ற உள்ளனர்.தன்பின் குரல் வாக்கெடுப்பு அல்லது டிவிஷன் முறைப்படி தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. வாக்கெடுப்பின் அடிப்படையில், துணை சபாநாயகர் பிச்சாண்டி தீர்ப்பளிக்க உள்ளார்.

 

சட்டப்பேரவையில் அதிமுக-விற்கு போதிய பலம் இல்லாத நிலையில், சபாநாயகருக்கு எதிராக ஜனநாயக முறைப்படி எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த தீர்மானத்தை அதிமுக கொண்டுவந்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

Right Menu Icon