--- --:--:-- --

அதிமுக கூட்டணி வைக்க தவம் கிடந்ததாக சரித்திரம் இல்லை

2

பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி என்று கூறியவர்கள் இன்று பாஜக வேண்டும் என்று கட்சிகள் தவம் கிடப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி என்று கூறியவர்கள் இன்று, பாஜக-வுக்காக தவம் கிடக்கும் சூழ்நிலையை இன்று பாஜகவின் தலைவர்களும், தொண்டர்களும் உருவாக்கியுள்ளார்கள்” என்று தெரிவித்தார்.

 

மேலும் எந்தக் கட்சியையும், தலைவரையும் சிறுமைப்படுத்த விரும்பவில்லை என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் , ”அவர் அதிமுகவை குறிப்பிட்டு பேசவில்லை என்றும், தவறான தகவல்கள் பரப்ப வேண்டாம்” என்றும் கேட்டுக்கொண்டார்.

 

மேலும், “அதிமுக பலம் பொருந்திய கட்சி” என்றும், “அதிமுக தொடங்கிய காலத்திலிருந்து எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்ததாக சரித்திரம் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon