--- --:--:-- --

இன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே போட்டி..!

1

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அனைவரும் எதிர்பார்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெறுகிறது. மினி உலகக் கோப்பை என வர்ணிக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு ஆட்டங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது.

 

இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களே இந்தப் போட்டியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்திய அணியைப் பொறுத்தவரை முதல் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. ஆனால் பாகிஸ்தானோ, நியூசிலாந்துக்கு எதிராக 60 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது.

 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் தான் பாகிஸ்தான் அரையிறுதி கனவை நினைத்துப் பார்க்க முடியும். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் மூன்றில் பாகிஸ்தானும் இரண்டில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளன.

 

கடைசியாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வாகை சூடியிருந்தது. இதனால், இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon