மோடி அரசுக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் போஸ்டர்
மத்திய அரசு தமிழ்நாட்டை ஏன் வஞ்சிக்கிறது என கேள்வி எழுப்பி தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. திமுக, கூட்டணி கட்சித் தலைவர்களின் படங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், பாஜக அமைச்சர்களின் ஆணவப் பேச்சு தமிழன்னையை அவமதிக்கிறது.
தமிழ்நாடே ஓரணியில் கொட்டிடு போர் முரசு என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தி அழிக்கப்பட்டு தமிழ் வாழ்க என்றும் போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது.






