--- --:--:-- --

போர்ச்சுக்கல் கார் ரேஸ் பயிற்சியின் போது அஜித்துக்கு சிறு விபத்து..!

2

போர்ச்சுக்கலில் கார் ரேஸ் பயிற்சியின் பொழுது நடிகர் அஜித்குமாருக்கு சிறு விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இன்றைய பயிற்சியின் பொழுது தனது கார் விபத்திற்கு உள்ளானதாகவும் உடனடியாக காரை மெக்கானிக் குழுவினர் சரி செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் மீண்டும் பயிற்சி தொடர்பாகவும் கூறினார். அஜித்குமார் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற அவரது அணி 3 வது இடத்தை பிடித்தது. இதையடுத்து போர்ச்சுக்கலில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்ள உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon