--- --:--:-- --

சென்னை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்..!

1

சென்னை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம் இழைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பெட்டியில் பயணித்தார். ஜோலார்பேட்டை வந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த பெட்டியில் ஏறியதாகக் கூறப்படுகிறது. அந்த நபரிடம் இது பெண்கள் மட்டும் பயணிக்கக் கூடிய பெட்டி என்று கர்ப்பிணி கூறியுள்ளார்.

 

ஆனாலும் அந்நபர் இறங்கவில்லை.இந்நிலையில், கர்ப்பிணி பெண் கழிவறைக்குச் சென்ற போது அவரைப் பின் தொடர்ந்த நபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கத்திக் கூச்சலிட்ட கர்ப்பிணியை அந்த நபர் சிறிதும் இரக்கமே இல்லாமல் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.கர்ப்பிணியின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

கர்ப்பிணிக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.இதற்கிடையே, நேற்றிரவு பெண் கொடுத்த அடையாளத்தின்படி கேவி குப்பம் பகுதியில் பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்ற இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon