பஸ் விபத்தில் காயம் அடைந்த பயணிகளுக்கு மனித நேய மக்கள் கட்சியினர் 50 யூனிட் ரத்தம் தானம்..!
திருப்பூரில் இருந்து ஈரோடு சென்ற தனியார் பேருந்து பல்ல கவுண்டம்பாளையம் அருகே விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த பயணிகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காத ரத்தம் தேவைபடுகிறது என்ற வாட்ச் அப்புகளில் தகவல் பரவியது. இதனையறிந்த மனிதநேய மக்கள் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட இளைஞரணி பொருப்பாளர் சாஜித் அஹமது அவர்கள் தலைமையில் தமுமுகவின் மருத்துவ சேவை குழு தற்போது முதல் கட்டமாக 32 யூனிட் இரத்தமும், 2 வது கட்டமாக 18 யூனிட் ரத்தமும் என 50 யூனிட் ரத்தம் வழங்கியுள்ளனர்.

மேலும் பல்வேறு கல்லூரி மாணவர்களும் இரத்தம் கொடுக்க முன்வந்து கொடுத்து வருகிறார்கள். மனித நேயத்துடன் ரத்தம் கொடுத்து உதவியர்களுக்கு விபத்தில் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள், சிசிச்சை அளித்து வரும் டாக்டர்கள், பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.





