பெட்ரோல் நிறத்தில் கிணற்று நீர்.. மக்கள் அச்சம்..!
குமரியில் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் பெட்ரோல் நிறத்துடன் துர்நாற்றத்துடன் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தின் பலர் அச்சமோடு கிணற்றிலிருந்து ஏற்றப்படும் தண்ணீர் பெட்ரோல் நிறத்திலும் துர்நாற்றத்துடனும் உள்ளது.
இது குறித்து காவல் நிலைய போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து புலியூர் சாலை பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் இருந்து பெற்றோர் கசிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.





