சிறுமியை கொலை செய்த குரங்குகள்!
பீகாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியா குமார் (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தனது வீட்டு மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த அவரை, திடீரென 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி வளைத்துள்ளன.
இதனால் பயந்து ஓடிய அவரை, குரங்குகள் சேர்ந்து மாடியிலிருந்து தள்ளிவிட்டுள்ளன. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார். என்ன இருந்தாலும் மிருகம் மிருகம்தானே.






