நடிகர் சைஃப் அலி கானை குத்திய நபரின் ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!
நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தி கொல்ல முயன்றவன் வங்கதேசத்தைச் சேர்ந்தவன் என உறுதிப்படுத்திய போலீசார் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகரான கொள்ளையர் ஒருவர் வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் பாலிவுட்டை அதிர செய்திருந்தது.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தனது பெயரை மாற்றி மாற்றி கூறி குழப்பத்தை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கைதான கொள்ளையன் வங்கதேசத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்த சூழலில் கைதானவர் வங்கதேசத்தை சேர்ந்தவன் தான் என்று தெரிவித்துள்ள போலீசார் இதற்கு ஆதாரமாக அவரின் குடியுரிமை மற்றும் ஓட்டுனர் உரிம சான்றுகளை வெளியிட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





