--- --:--:-- --

திருமுருகன் பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் நாட்டு நல பணி திட்ட முகாம்..!

5

ஈரோடு மாவட்டம், பெருந்துறை நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, திருமுருகன்பூண்டி பூர்ண சேவா டிரஸ்ட் மற்றும் திருமுருகன் பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் நாட்டு நல பணி திட்ட முகாம் திருமுருகன்பூண்டியில் 3 நாட்கள் நடக்கிறது.

 

முதல் நாள் முகாமிற்கு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் கிருத்திகா தலைமை தாங்கினார். கல்லூரி ஆயுர்வேத டாக்டர் கிருஷ்ண பிரசாத் வரவேற்றார். முகாமினை பூர்ண சேவாக் கட்சித் தலைவர் ராமசாமி மற்றும் திருமுருகன் பூண்டி ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

முகாமில் மருத்துவக் கல்லூரியில் 2 ம் ஆண்டு படிக்கும் 26 மாணவிகள் மற்றும் 16 மாணவர்கள் என 40 பேர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொண்டனர். புதர் மண்டி கிடந்த செடி, கொடிகளை அகற்றி தரையில் பாத்தி கட்டி செடி வளர்க்கும் உதவும் வகையில் தூய்மைப்பணியை மேற்கொண்டனர்.

 

பின்னர் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தனர். தொடர்ந்து இரண்டு நாட்களில் பூண்டி கோவில் சுற்றுப்பகுதியையும், பூர்ணா சேவா டிரஸ்ட் பகுதியிலுள்ள சுற்றுப்பகுதியிலும் தூய்மைப் பணியை மேற்கொள்ள உள்ளனர். முடிவில் நாட்டு நல பணித்திட்ட முகாம் ஒருங்கிணைப்பாளர் சபரிதரன் நன்றி கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon