மகா கும்பமேளாவில் பெரும் தீவிபத்து..!
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாஸ்திரி பாலத்தின் அருகில் இருக்கும் டெண்ட் ஒன்றில் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ, மளமளவென அடுத்த 30 டெண்ட்டுகளுக்கு பரவிவிட்டது.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




