ஒலிம்பிக்கில் செஸ் இடம்பெற டி.குகேஷ் விருப்பம்..!
ஒலிம்பிக்கில் செஸ் போட்டிகள் இடம்பெற வேண்டும் என உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ் விருப்பம் தெரிவித்துள்ளார். செஸ் போட்டிகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டால் அதன் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் எனவும், அந்த நாளை தான் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத அளவில் செஸ் இந்தியாவில் பிரபலமான விளையாட்டாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




