காவலர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு
பாலமேட்டில் ஜல்லிக்கட்டில் போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்கள் தாங்கள் பதிவு செய்த ஆன்லைன் விண்ணப்பத்துடன் பரிசோதனைக்கு சென்று டீசர்ட் வாங்குவதற்காக உள்ளே செல்வதற்காக முயன்றனர்.
இதனால் ஏற்பட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பேரிகாடுகள் அமைக்கப்பட்டு இருந்தது. பேரிக்காடுகளை மீறியும் வீரர்கள் உள்ளே செல்ல முயற்சித்ததால் காவல்துறையினருக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.






