கங்கனா படத்திற்கு தடை விதித்த வங்கதேசம்
கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள ‘எமெர்ஜென்சி’ படத்தை திரையிட வங்கதேச அரசு தடைவிதித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான 1971 வங்கதேச விடுதலைப் போரில், இந்திய ராணுவம் மற்றும் இந்திரா காந்தி அரசின் தலையீடு குறித்து இப்படத்தில் பேசப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் இடைக்கால அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.






