சத்தீஸ்கர்: 3 நக்சல்கள் என்கவுன்ட்டர்
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜாப்பூர் மாவட்டம் இந்திராவதி தேசிய பூங்கா அருகே பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த நக்சல்களுடன் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து தானியங்கி துப்பாக்கி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.





