பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்..!
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதற்காக ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளாலும், அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியதாலும், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரொக்கம் வழங்கவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மேலும் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் தலைமையில் ரேஷன் கடைகள் மூலம் பரிசு தொகுப்பு விநியோகம் செய்வதற்காக டோக்கன்களை கடந்த 3 ஆம் தேதி முதல் ஊழியர்கள் வீடுவீடாக சென்று விநியோகம் செய்து வந்தனர்.இதையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




