--- --:--:-- --

மெட்ராஸ்காரன் பட விழாவில் நடிகர் கலையரசன் ஆதங்கம்..!

2

ஒரு கதையில் வரும் முக்கிய கதாபாத்திரம் உயிரிழக்கிறது என்றால் அதில் நடிக்க தன்னை தேர்வு செய்து விடுகிறார்கள் என நடிகர் கலையரசன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். கலையரசன் நடித்துள்ள மெட்ராஸ்காரன் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது.

 

அதன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கலையரசன் நீண்ட நாட்களாக மனதில் இருந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பெரும்பாலான படங்களில் அவரின் கதாபாத்திரத்தை கொன்று விடுவார்கள் இல்லையென்றால் உயிரிழக்கும் படி கதை அமைக்கப்படும்.

 

இது குறித்து தன் வேதனையை பகிர்ந்த கலையரசன் இனி குறிப்பிட்ட கதைகளில் மட்டுமே துணை நடிகராக நடிக்க இருப்பதாக கூறினார். அதை தவிர ஹீரோ கதாபாத்திரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருவதாக நடிகர் கலையரசன் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon