அண்ணா யுனிவர்சிட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னை அண்ணா யுனிவர்சிட்டிக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சுமார் 2 மணிநேர தீவிர சோதனைக்குப் பிறகு, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.
இந்த கல்லூரி வளாகத்தில், அண்மையில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





