நடிகை சீதாவின் தாய் காலமானார்..!
நடிகை சீதாவின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் சீதா உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். கடந்த வாரம் தாயுடன் எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த சீதா, “என் சாமி” என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் பதிவிட்ட ஒரு வார காலத்திற்குள் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. செய்தியறிந்து அவருடைய விருகம்பாக்கம் இல்லத்திற்கு திரைத்துறையினர் விரைந்துள்ளனர்.





