கிணற்றில் குதித்த பெண்ணை காப்பாற்ற முயற்சித்து குதித்த இளைஞர் பலி..!
குடும்ப பிரச்சனையே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்ற சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்ன மொக்கை முருகேஸ்வரி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் முருகேஸ்வரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பரத் என்ற இளைஞருக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சின்ன மொக்கைக்கு தெரிய வந்தது. குடும்ப மானம் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலையிலும் கணவன் மனைவி இடையே சண்டை நடைபெற்றுள்ளது.
இதனால் முருகேஸ்வரி தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்று இருக்கிறார். பின்னர் அவர் புதுப்பட்டி சாலை கிணற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். முருகேஸ்வரியை பின் தொடர்ந்து வந்த பரத் என்பவரை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளனர். கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தத்தளித்து கொண்டிருந்த முருகேஸ்வரியை கயிறு கட்டி மேலே கொண்டு வந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் இருந்த பரத்தின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உத்தமபாளையம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.





