--- --:--:-- --

டிச.31 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கட்டுபாடுகள்..!

1

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை அதிகரிக்க பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

 

புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை தடுத்து கண்காணிக்க, கண்காணிப்பு சோதனைக் குழுக்களை அமைத்து, விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட காவல் துறை சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.

 

31-ஆம் தேதி மாலை முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை, பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதிகளில், குதிரைப்படைகள் மற்றும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Right Menu Icon