மண்புழு சைசில் இருந்த பாம்பு..அலப்பறை செய்த பைக் உரிமையாளர்..!
தூத்துக்குடியில் வழக்கம்போல் பாம்பு புகுந்து விட்டது என தூத்துக்குடியை சேர்ந்தவர் அலப்பறை செய்த நிலையில் மண்புழு சைசில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர். பைக்கை பார்ட் பாட்டாக கழட்டி வெளியே எடுத்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஹர்பன்சிங். இவரது பைக்கில் பாம்பு புகுந்ததாக தெரிவித்த நிலையில் பாம்பு மண்புழு சைசில் இருந்தது அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தது.






