--- --:--:-- --

இன்று நடைபெறுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!

2

மிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத அதிமுக, 7 இடங்களில் டெபாசிட் இழந்தது. இதனால், அடிமட்டத்தில் கட்சியை பலப்படுத்த மூத்த நிர்வாகிகள் 10 பேர் அடங்கிய கள ஆய்வுக் குழுவை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்தார்.

 

இந்த குழு, தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து கட்சியின் நிலவரங்களை ஆய்வு செய்து, எடப்பாடி பழனிசாமியிடம் விவரங்களை தெரிவித்துள்ளது. இந்த கள ஆய்வின் முடிவுகள் பொதுக்குழுவில் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

உட்கட்சித் தேர்தலை நடத்துவது, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தொடர்பான தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.

 

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி வியூகங்கள் அமைக்கும் அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என கருதப்படுகிறது.

 

தேர்தலுக்கு தயாராவதில் அடுத்த 15 மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இந்த காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

Right Menu Icon