அமராவதி ஆற்றில் வெள்ளம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நேற்று அதிகாலை 4 மணி முதல் இன்றுவரை தொடர்ந்து மழை பெய்து வருவதால், அமராவதி ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழுமம் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனை எடுத்து இன்று காலை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




