திருச்செந்தூரில் அதிர்ச்சி..கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் மாயம்..!
திருச்செந்தூரில் கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் மாயமானதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அம்பலி நகரை சேர்ந்த ரமேஷ், அஜய், விஜய் ஆகியோர் பாய்மரக்கடலில் படகுக்கு சென்றுள்ளனர்.
மாலை வரை அவர்கள் மூன்று பேரும் வீடு திரும்பாத நிலையில் சக மீனவர்கள் 10 பைபர் படகுகள் மூலம் கடலுக்கு சென்று தேடியுள்ளனர். மாயமான மீனவர்கள் கிடைக்காததால் மீட்க சென்றவர்கள் கரை திரும்பினார்.





