மாயமான விவசாயி..காலையில் மிதந்த உடல்..!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி சடலமாக கரை ஒதுங்கினார். மரக்காணம் அடுத்த காளிமேடு பகுதியை சேர்ந்த விவசாயி பாலமுருகன். இவரது விவசாய நிலம் ஊருக்கு வெளியே உள்ளது.
நேற்று மாலை தனது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு பாலமுருகன் வீடு திரும்ப முயற்சித்தார். அந்த சமயத்தில் தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு ஆற்றில் வெள்ளம் சென்று கொண்டிருந்தது.
நேற்று மாலை இந்த வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட பாலமுருகன் மாயமானார். இன்று அதிகாலை அவரது உடல் கரை ஒதுங்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





