--- --:--:-- --

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!

1

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றது. இதில், குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல நிலைகளில் தேர்வு நடத்தப்படுகின்றன.

 

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் 2,327 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ம் தேதி வெளியாகி ஜூலை 19 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது.

 

இந்த தேர்வுக்கு தமிழக முழுவதும் மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.40 பேர் மட்டுமே தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது.டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிாகி உள்ளது. தேர்வு நடைபெற்று 57 வேலை நாட்களுக்குள் முடிவுகள் விரைவாக வெளியாகி உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Right Menu Icon