--- --:--:-- --

மாநிலங்களவைக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு..!

8

6 மாநிலங்களவை இடங்களுக்கு டிசம்பர் 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் மூன்று, ஒடிசா, மேற்குவங்கம், ஹரியானாவில் தலா ஒரு மாநிலங்களவைக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அன்று மாலை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon