இந்த ஆசிரியர் தான் வேண்டும்…மாணவர்கள் திடீர் போராட்டம்..!
பொன்னேரியில் பி.டி ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அரசு பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்கு பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வந்த ஜெயராஜ் என்பவர் அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை சமரசம் செய்து பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து உள்ளே சென்ற மாணவர்கள் உடற்கல்வி ஆசிரியர் இடமாற்றம் செய்தது ஏன் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியையுடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையால் தான் பிடி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





