ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 1500 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து துறைமுகத்தின் புதிய புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.






