பாம்பன் பாலத்தில் அதிர்ச்சி..வெளியே தெரியும் இரும்பு கம்பிகள்..
பாம்பன் சாலை பாலத்தின் தூணில் ஏற்பட்டுள்ள சேதத்தை உடனே சீரமைப்பதற்காக கோரிக்கை எழுந்துள்ளது. பாம்பன் சாலை பாலத்தின் கீழ்ப்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததால் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.
வெளியே தெரியும் கம்பிகள் கடல் நீர் மற்றும் கடல் காற்றால் விரைவில் துருப்பிடிக்கலாம் எனவும் அதனால் தூண் வலுவிழக்கலாம் எனவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உடனடியாக சேதம் அடைந்த பாகத்தை சரி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






