--- --:--:-- --

10 ஆண்டுகாலம் திமுக தொடர் தோல்வியை சந்திக்கவில்லையா? – ஈபிஎஸ் கேள்வி

1

10 ஆண்டுகாலம் திமுக தொடர் தோல்வியை சந்திக்கவில்லையா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

அதைத்தொடர்ந்து ஜானகி அம்மாளின் முழு உருவப் படத்தை திறந்து வைத்து, நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார்.எம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமார் விழா மலரை பெற்றுக் கொண்டார். அதன்பின் ஜானகி ராமச்சந்திரனுடன் பயணித்த நடிகைகள் ராஜஶ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, குட்டி பத்மினி உள்ளிட்டோருக்கு எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்.

 

ஜானகி அம்மாளின் இந்த முழுஉருவச் சிலை, அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விழாவில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தொடர் தோல்விகளை கண்டு வருவதாக சிலர் பேசிவருவதாகவும், 10 ஆண்டுகாலம் திமுக தொடர் தோல்வியை சந்திக்கவில்லையா?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய ஈபிஎஸ், “சக்கரம் எப்படி சுழல்கிறதோ, அதுபோலதான் வெற்றி தோல்வியும் மாறி மாறி அமையும்” என்றார்.அதிமுக எப்போதெல்லாம் பிரச்னைகளை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் வெற்றி பெறுவது இயல்பு எனவும், அதிமுகவை முடக்க நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது எனவும் ஈபிஎஸ் பேசினார்.அதிமுகவுக்கு இருப்பது போல் வேறு எந்த கட்சிக்கும் தொண்டர்கள் கிடையாது எனவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

Right Menu Icon