கூடைப்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவம்..வெளியான அதிர்ச்சி தகவல்..!
சென்னையில் 15 வயது கூடை பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில் சிக்கன் ரைஸ் மற்றும் பர்கர் சாப்பிட்டது அவரது மரணத்திற்கு காரணம் இல்லை என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவையை சேர்ந்த எலினா போட்டிக்காக குவாலியர் சென்று விட்டு ரயிலில் சென்னைக்கு வந்த பொழுது வாந்தி, மயக்கம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது உடற்கூறாய்வு அறிக்கையின் முதற்கட்ட தகவலின் படி எலினாவுக்கு உதரவிதானம் என்ற உள்ளுறுப்பு பிறந்ததிலிருந்து பலவீனமாக இருந்ததாகவும் இந்த பிரச்சனை விளையாடும் போது இன்னும் அதிகமாகி சதை கிழிந்ததாகவும் குடல் மேலேறி நுரையீரல் மற்றும் இதயம் செயல் இழந்து விட்டதால் மரணம் நேரிட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.





