தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விடுதி உணவில் புழு..!
திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விடுதி உணவில் புழு இருந்ததாக வீடியோ வெளியான விவகாரம்.விடுதி உணவக உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.இந்த பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மேலும் 900-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்து அங்கு தனியார் பராமரிப்பில் செயல்படும் விடுதி கேண்டினில் உணவு அருந்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பல்கலைக்கழக விடுதி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள்,பூச்சி தட்டான் போன்றவை இருப்பதாக மாணவ மாணவிகள் குற்றம் சாட்டி வந்தனர்.மேலும் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் விடுகி உணவில் புழு பூச்சி இருப்பது போன்று வீடியோ எடுத்த மாணவர்கள் சிலர் அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர.இது ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதன்னையடுத்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் உள்ளிட்ட உயர்மட்ட குழுவை அமைத்து இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
இந்த உயர் மட்ட குழு விடுதி உணவகத்தில் விசாரணை மேற்கொண்டதையடுத்து விடுதி உணவக உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




