4 படம் ஓடிவிட்டால் முதலமைச்சர் ஆகிவிட முடியாது – செல்லூர் ராஜூ
நான்கு படம் ஓடிவிட்டால் அடுத்த முதலமைச்சர் தாம் தான் என தற்போதுள்ள நடிகர்கள் எண்ணுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை ஓபுளா படித்துறையில் அதிமுக தொடக்கவிழாவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் ராஜூ, எல்லோரும் தாங்கள்தான் முதலமைச்சர் என்ற எண்ணத்தில் கட்சித் தொடங்குவதாகக் கூறினார்.இதனிடையே, திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, இளைஞர்களுக்கு கட்சிப் பொறுப்பில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்றும் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




