--- --:--:-- --

சபரிமலை தேவசம்போர்டு வெளியிட்ட அறிவிப்பு..!

8

பரிமலையில் மண்டல பூஜைக்காக இன்று மதியம் ஒரு மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மண்டல பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

 

சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது இரவு 7 மணிக்கு சபரிமலை கோயில்களில் புதிய மேல் சாந்திகளான அருண்குமார், நம்பூதிரி மற்றும் வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டு நாளை அதிகாலை 3 மணிக்கு மண்டல கால பூஜைகள் நடைபெறும்.

 

இன்று நடைபெறுவதை முன்னிட்டு மதியம் 1 மணி முதல் அம்பையிலிருந்து சன்னதிக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை முதல் 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என்றும் பிற்பகல் 2 மணி நேரம் மட்டுமே நடை மூடப்பட்டிருக்கும் எனவும் தேவசம்போர்டு தலைவர் பிரஷாந்த் தெரிவித்துள்ளார்.

 

சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 30ம் தேதி வரை முடிவடைந்துள்ளது.

 

Right Menu Icon