விசிகவில் புதியவர்களுக்கு பதவி..!
நிர்வாக மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒருங்கிணைப்புக் குழுவை விசிக நியமித்துள்ளது. சட்டமன்ற தொகுதிகளை 83 குழுக்களாகப் பிரித்து, ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 2 அல்லது 3 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய குழுவிற்கு புதிதாக தலைமை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கட்சியை வலுப்படுத்தும் வகையில், சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என 234 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.





