--- --:--:-- --

விதிமுறையை மீறிய ஸ்விக்கி, ஜொமேட்டோ..!

2

ணவு விநியோகத்தில் ஈடுபட்டு வரும் ஸ்விக்கி, ஜொமேட்டோ நிறுவனங்கள் இந்தியா வர்த்தக போட்டி ஆணையத்தின் விதிகளை மீறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. உணவு வணிகத்தில் போட்டி தன்மையை சீர்குலைகும் வகையில் செயல்படுவதாக இரண்டு நிறுவனங்கள் மீது இந்திய தேசிய உணவக சங்கம் புகார் அளித்தது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விசாரணை தொடங்கப்பட்டதாகவும் இந்த இரு நிறுவனங்களுக்கு மட்டும் அனுப்பப்பட்ட விசாரணை அறிக்கையை ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் பிரத்தியேகமாக தங்களது தளத்தில் மட்டும் பட்டியலிடும் உணவகங்களுக்கு சாதகமாக செயல்பட்டது தெரியவந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

 

குறிப்பாக தங்கள் தளத்தை மட்டும் பதிவு செய்யும் உணவகங்களுக்கு கமிஷனை குறைத்துக் கொள்வதாக சொன்னோம். இதனால் குறைந்த விலையில் உணவு வழங்கும் ஹோட்டல்கள் மற்ற தளங்களிலும் வணிகம் செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Right Menu Icon