--- --:--:-- --

ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்..!

3.1

ள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஓடையை மறைத்து கட்டப்பட்டுள்ள வீடுகளை நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினர் அகற்றி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டு உரிமையாளர்கள் கதறி அழுதனர்.

 

மேமாலூர் கிராமத்தில் உள்ள ஏரிவாய்க்காலை ஆக்கிரமித்து கட்டி உள்ள வீடுகளை அகற்றக்கோரி நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில் மூன்று முறைக்கு மேல் வருவாய் துறை என ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டது.

 

இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் மூன்று 44 வீடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. வீட்டு உரிமையாளர்கள் காவல்துறையினரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon