சென்னையில் அப்பார்ட்மெண்டில் வீட்டில் சடலமாக கிடந்த சிறுமி..!
சென்னை அமைந்த கரையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்து சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த சில ஆண்டுகளாக சென்னை அமைந்தகரை சதாசிவம் மேத்தா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றில் சிறுமி சடலமாக கிடந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் குளியலறைக்கு சென்று திரும்பி நீண்ட நேரமாக கதவை திறக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் கதவை உடைத்து பார்த்த பொழுது சிறுமி சடலமாக கடந்துள்ளார்.
இது பற்றி யாரிடமும் அவர் தகவல் தெரிவிக்காமல் நேற்று பிற்பகலில் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து அமைந்தகரை போலீசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சிறுமியின் சடலத்தில் காயங்கள் இருப்பதால் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சிறுமியுடன் பணியாற்றிய சிலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





