சென்னை அருகே மழையில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட 5 பேருக்கு நேர்ந்த கதி..!
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் மழையில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காளான் சாப்பிட்ட லக்ஷ்மி, அலமேலு, சரண்யா உள்ளிட்ட ஐந்து பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் தலை சுற்றல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஐந்து பேரும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






