யானை கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் 2 யானைகள் உயிரிழப்பு..!
மட்டக்கலப்பை நோக்கி சென்ற ரயில் காட்டு யானை கூட்டத்தின் மீது மோதிய விபத்தில் இரண்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. எரிபொருளை ஏற்றிக்கொண்டு செல்லும் பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் காரணமாக நான்கு பெட்டிகள் தடம் புரண்டன.
மேலும் தண்டவாளம் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்தில் யானை கூட்டத்திலிருந்து மேலும் சில யானைகள் பலத்த காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





