--- --:--:-- --

துருப்பிடித்த மின்கம்பத்தை அகற்ற வேண்டி மக்கள் நடத்திய நூதன போராட்டம்..!

6

மின்கம்பத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து வழிபட்ட வினோதம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது. ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பாட்டில் இருக்கும் மின்கம்பம் துருப்பிடித்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.

 

ஆபத்தான நிலையில் உள்ள அந்த மின் கம்பத்திற்கு முட்டுக்கொடுத்தவர் இரண்டு கட்டைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அசம்பாவிதம் நிகழும் முன்னர் மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தி அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு ஆனந்த வள்ளி நூதன முறையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது குறித்து ஸ்ரீ வைகுண்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் கேட்ட பொழுது மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon